அரசியல் மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளரும் பிரபல தொழில்முனைவோருமான கெலும் ஜயசுமண இன்று (01) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (01) அதிகாலை 1.45 மணியளவில் கொழும்பு கோட்டை கணினி குற்றப் பிரிவினரால் கலும் ஜயசுமண அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும் மூத்த அரசியல் மற்றும் சமூக ஆர்வலர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.