2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சுக்கிரன் மற்றும் வியாழன் ஆகியவை தங்கள் நிலைகளை மாற்றுகின்றன.
இந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் பிரவேசிக்கப் போகின்றன.
இந்த இரண்டு ராசிகளும் ஒரே நேரத்தில் மிதுன ராசிக்குள் நுழைகின்றன. இதனால் கஜலக்ஷ்மி ராஜயோகம் உருவாகிறது.
அதன்படி, இந்த ராஜயோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் நன்மையடையப் போகிறார்கள் எனப் பார்ப்போம்.
மேஷம்
செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை, மேஷ ராசியினருக்கு அதீத நன்மைகளைக் கொடுக்கும். இக் காலகட்டத்தில் வியாபாரம் தொடங்க நினைப்பவர்களுக்கு சிறந்த காலகட்டமாக இருக்கும். தொழில் புரிபவர்களுக்கு சக ஊழியர்களின் முழு ஆதரவு கிடைக்கும். காதலிப்பவர்கள் அவர்கள் உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியில் வெற்றியடைவார்கள்.
மிதுனம்
சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். தொழிலில் நன்றாக பிரகாசிக்க முடியும். நிதி சிக்கல்கள் தீரும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.
துலாம்
பொருளாதார நன்மைகள் கிடைக்கும். அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். நல்ல தொழில் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
கும்பம்
கடன் சுமைகள் நீங்கும். வீட்டில் மகிழ்ச்சியான விடயங்கள் நடக்கும். புதிய ஒப்பந்தங்களால் இலாபம் அதிகரிக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். பதவி உயர்வும் கிடைக்கும்.