லெபனான் சிவில் பாதுகாப்பு மையத்தின் மீதான இஸ்ரேலியத் தாக்குதலை ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
லெபனான் சிவில் பாதுகாப்பு மையத்தின் மீதான தாக்குதலில் சுமார் 12 துணை மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 59 பேர் உயிரிழந்துள்ளதுடன் 182 பேர் காயமடைந்துள்ளனர்.
லெபனானில், காசா மீதான போர் ஆரம்பமானதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் சுமார் 3,445 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 28 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 120 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மேலும் வடக்கு காசா மீதான இஸ்ரேலின் முற்றுகை தொடர்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இஸ்ரேல் ஹமாஸ் மோதலால் 43 ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்