இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் ஏனையவர்களால் முறையற்ற விதத்தில் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அரச தகவல்கள் கூறுகின்றன.
இதற்காகப் புதிய நிறுவனம் ஒன்றை அமைப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது என்று அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
உள்நாட்டில் மாத்திரம் அல்ல வெளிநாடுகளிலும் இவர்கள் இவ்வாறான விதத்தில் சொத்துக்களைச் சேர்த்து வைத்திருந்தால் அவற்றையும் இந்த நிறுவனம் அரசுடமையாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிறுவனங்கள் வெளிநாடுகள் பலவற்றில் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.