இதுவரை பிரச்சார செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்கள்
செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 34 வேட்பாளர்கள் இதுவரை தமது தேர்தல் பிரச்சார செலவு அறிக்கையை இன்னும் வழங்கவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கிய 38 வேட்பாளர்களில், 4 வேட்பாளர்கள் மட்டுமே தங்களது பிரசார செலவு அறிக்கையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவுக் கட்டுப்பாடு சட்டத்தின்படி, எதிர்வரும் 13ம் திகதிக்குள் பிரசார செலவு அறிக்கைகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள் தமது பிரசார செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 13ஆம் திகதிக்கு பின்னர் அறிக்கைகள் வழங்கப்பட்டாலும் அது சட்டவிரோதமானதாக கருதப்பட்டு தண்டிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.