சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி மாதங்கியின் கின்னஸ் உலக சாதனை

சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் பயிலும் மாணவியான மாதங்கி கனகசுந்தரம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
வேகமாக அதிக எண்ணிக்கையான பாதணிகளை அடுக்குதல் என்னும் தலைப்பின் கீழான போட்டியிலேயே இந்த சாதனையை படைத்துள்ளார்.

இணையத்தளம் ஊடாக விண்ணப்பித்து 10 பாதணிகளை ஒன்றன் மேல் ஒன்றாக 59 செக்கன்களில் அடுக்கி முடித்தே குறித்த சாதனையை புரிந்துள்ளார்.

கடந்த மே மாதம் 20 திகதி கொடிகாமத்தில் தனது வீட்டில் இரு சாட்சிகள் முன்னிலையில் கின்னஸ் உலக சாதனை சட்டதிட்டங்களுக்கு அமைவாக குறித்த சாதனை நிகழ்வு காணொளியாக பதிவு செய்யப்பட்டு இணையத்தினுடாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

மூன்று மாதங்களின் பின் world guiness assesment commity மூலம் இதன் உண்மைத்தன்மை ஆராயப்பட்டு 28/8/2024 அன்று நிகழ்வு கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு அதற்கான சான்றிதழ் குறித்த மாணவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கின்னஸ் சாதனைக்கான விண்ணப்பம் முதல் அனைத்து விடயங்களையும் குறித்த மாணவியே தனது சுய முயற்சியில் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை கின்னஸ் சாதனை படைத்த மாணவியை அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடியாக அழைத்து சாதனை சான்றிதழைப் பார்வையிட்டு பாராட்டியிருந்தார்.

Recommended For You

About the Author: admin