கோவாவில் இருந்து தென்மேற்கே 102 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த கப்பல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்திலிருந்து இலங்கை தலைநகர் கொழும்பு நோக்கி வந்துக் கொண்டிருந்ததாக இந்திய கடலோர காவல்படை (ஐசிஜி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடலோர காவல்படையின் அறிக்கையின்படி, கப்பல் கடல்சார் அபாயகரமான பொருட்கள் (ஐஎம்டிஜி) சரக்குகளை ஏற்றிச் சென்றது மற்றும் வணிகக் கப்பலின் முன் பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டிருந்தமையே தீ விபத்துக்கு காரணமென தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலைக்கு மத்தியில் தீயை அணைக்கும் பணியை கடலோர காவல்படையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர்களின் பாதுகாப்பு இந்திய கடலோர காவல்படையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, இரண்டு ஐசிஜி கப்பல்கள் கோவாவிலிருந்து தீயை அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.