அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா, 2021ஆம் ஆண்டு விண்வெளியில் நிகழும் மாற்றங்களை படம் பிடிப்பதற்காக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்ணுக்கு அனுப்பியது.
இந்நிலையில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முதல் படங்கள் வெளியாகி இரண்டு வருடங்கள் முழுமையடைந்ததைக் குறிக்கும் வகையில் நாசா புதிய படத்தை வெளியிட்டுள்ளது.
பென்குயின் மற்றும் எக் என அழைக்கப்படும் இரு விண்மீன் திரள்கள் 326 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் ஹைட்ரா விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ளதையே ஜேம்ஸ் வெப் படம்பிடித்துள்ளது.
இந்த இரண்டு விண்மீன் திரள்களும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களின் தொகுப்பாகக் காணப்படுகிறது.