கனடாவில் இடம்பெற்று வரும் மோசடி சம்பவம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் தேசிய நாளைக் கொண்டாடும் வகையில் பலரும் சுற்றுலா விடுதிகளில் விடுமுறைகளை திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் இணையத்தினூடான பதிவுகளால் பல்வேறு மோசடி செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது குறைந்த விலைகளில் விளம்பரங்களினூடாக அதிகளவான மோசடி செயற்பாடுகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.
ஒன்டோரியோவைச் சேர்ந்த பெண் ஒருவர் முகநூல் விளம்பரத்தினூடாக செய்த முன்பதிவினால் ஏமாற்றப்பட்டுள்ளார்.
அவரிடம் 1000 டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொது மக்கள் இவ்வாறா மோசடி செயற்பாடுகள் குறித் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.