திசைக்காட்டி மீது கற்களையோ அல்லது சேற்றையோ வீசி வீழ்த்திவிட முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவதூறுகளின் வெள்ளத்தை தடுத்து நிறுத்துவது சாத்தியமற்றது என்பது உறுதியாகியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், 21ஆம் நூற்றாண்டில் எமது நாடு ஒரு புதிய மருமலர்ச்சிக்கான பாதையில் பயணிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் அல்லது தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மாத்திரமன்றி, நாட்டின் புதிய பாய்ச்சலுக்காக அனைத்து சக்திகளும் ஒன்றிணைவதற்கான சந்தர்ப்பமாக இதனைக் கருதுமாறும் அவர் கோரியுள்ளார்.
மேலும், மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும் வரை சலுகைகள் வழங்கப்படும் எனத் தெரிவித்த அனுரகுமார திஸாநாயக்க மக்கள் காலூன்றி நிற்கும் வகையில் நாட்டில் உற்பத்திப் பொருளாதார நிலைமை உருவாக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.