சீன கடலட்டைகள்’: ஜெனிவாவில் சிறீதரன் கூறியதென்ன?

சீனா மூலம் வடக்கு கடற்பரப்பில் கடலட்டை திட்டங்களை நடைமுறைப்படுத்துவது பொருளாதார ரீதியில் நன்மையாக இருந்தாலும் குறித்த வேலைத்திட்டங்கள் மூலம் வடக்கின் மீன்பிடித் துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜெனிவாவில் தெரிவித்தார்.

ஜெனிவா நகரில் இடம்பெற்று வரும் தேசிய பொருளாதார மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

சீனாவில் நவீன தொழிநுட்பம் வடக்கின் மீன்பிடித் தொழிலுடன் தொடர்புபட்டிருந்தாலும் எந்தவித தொழிநுட்ப வளர்ச்சியும் காணாத இலங்கையின் வடக்கு, கிழக்கு மீனவ மக்கள் இந்த வளர்ச்சியுடன் கூடிய தொழிநுட்பத்தின் முன்னால் போட்டியிடுவது பாரிய அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது என சுட்டிக்காட்டினார்.

விசேடமாக, பருத்தித்துறை மற்றும் மன்னார் போன்ற பிரதேசங்களில் நடத்தப்படும் சிறிய மீன் பண்ணைகள் தற்போது மூடவேண்டிய அபாயத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், வடக்கு, கிழக்கில் காணப்படக்கூடிய கடற்பரப்பில் சிறிய மீன்கள் உருவாகக்கூடிய இடங்கள் விரைவில் அழிவடைந்து வருவதாக மீனவர்கள் தெரிவித்துவரும் நிலையில், இலங்கையின் வடக்கு கிழக்கில் மீனவ மக்கள் உட்பட தென்னிந்திய மீனவ மக்களுடன் இணைந்து இந்த கடற்பரப்பை பாதுகாக்கும் மாநாட்டை நடத்துவது அவசியம் எனவும் அறிவுறுத்தினார்.

அவ்வாறான ஒரு மாநாட்டை நடத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வது வடக்கின் மீனவர்கள் உள்ளிட்ட தமிழ்நாடு மீனவர்களின் ஜீவனோபாயத்தை வலுவூட்டும் என தெரிவித்த அவர், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மீனவ கைத்தொழில் வேறுபடும் நிலையில் வடக்கின் மீனவ தொழில் அதை விடவும் மாற்றமடையும் என சுட்டிக்காட்டினார்.

Green ocean திட்டம் மூலம் வடக்கின் கடற்பரப்பு பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என சிவஞானம் சிறீதரன் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin