ஜப்பானிய சனத்தொகையில் வீழ்ச்சி

2050 ஆம் ஆண்டுக்குள் ஜப்பானில் உள்ள ஐந்தில் ஒரு குடும்பம் தனியாக வாழும் முதியவர்களால் நிறைந்திருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

தேசிய மக்கள்தொகை மற்றும் சமூக பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஆய்வறிக்கையினை வெளியிட்டு வருகிறது.

இதன்படி, குறித்த நிறுவனம் இம்முறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவியவந்துள்ளது.

இந்த நிலையில் வயதான மக்களை எவ்வாறு திறம்பட பராமரிப்பது என்பதைக் கண்டறிவதற்கு ஜப்பான் போராடுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, ஜப்பானில் 2050 ஆம் ஆண்டளவில், 10.8 மில்லியன் முதியவர்கள் தனியாக வாழ்வார்கள் என குறிப்பிடப்படுகிறது.

ஜப்பானிய இளைஞர்கள் திருமணத்தை தாமதப்படுத்தல் அல்லது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளாமல் இருத்தல் போன்ற காரணங்களால் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பானிய பிரஜைகளின் எண்ணிக்கை 837,000 இனால் குறைவடைந்து 121 மில்லியனாக காணப்படும் நிலையில், இந்த குறைவின் அளவு வெளிநாட்டவர்களின் வருகையால் ஈடுசெய்யப்படுவதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன

Recommended For You

About the Author: admin