பூமியானது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருவதற்கு 365 நாட்கள் 6 மணிநேரம் செல்கிறது. இந்த கணக்கின் அடிப்படையில் ஒரு வருடம் என்பது 365 நாட்களாகும்.
மீதியுள்ள 6 மணித்தியாலம் சேர்த்து பெப்ரவரி மாதத்தில் கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்படும். இதனை லீப் வருடம் என அழைக்கிறோம்.
பெப்ரவரி மாதத்தில் சரியாக 28 நாட்கள் இருக்கும். அதனுடன் 4 வருடங்களுக்கு ஒருமுறை 1 நாள் சேர்க்கப்படுகிறது.
வரலாற்றின் அடிப்படையில் ஸ்வீடன் நாடானது, 1700ஆம் ஆண்டு லீப் வருடம் கொண்ட ஜூலியன் காலண்டரிலிருந்து கிரகோரியன் காலண்டருக்கு மாறியது. இதனால் கூடுதல் நாட்கள் சேர்க்கப்பட்ட பெப்ரவரி மாதத்தைக் கொண்ட லீப் வருடம் என்பது கிடையாது.
இதன் பின்னர் 1704 மற்றும் 1708ஆம் ஆண்டுகளில் காலண்டர் உருவாக்கத்தில் ஏற்பட்ட குழப்பத்தினால், லீப் வருடம் மீண்டும் இடம்பெற்றுது.
இதனால், கிரகோரியன் காலண்டரை பயன்படுத்த முடியாத ஸ்வீடன் நாட்டினர் மீண்டும் ஜூலியன் காலண்டருக்கு மாறினர்.
இந்நிலையில், விடுபட்ட நாட்களை சரிசெய்வதற்காக 1712ஆம் வருடம் பெப்ரவரியில் 2 லீப் நாட்கள் சேர்க்கப்பட்டு 30 நாட்களாக அனுசரிக்கப்பட்டது.
அதாவது, அந்த வருடத்தில் மட்டும் பெப்ரவரியில் 30 நாட்கள் இருந்துள்ளது. இதனால் பெப்ரவரியில் 30 நாட்களைக் கொண்ட நாடு என்ற பெருமையை ஸ்வீடன் பெற்றது.
அதேபோல், சோவியத் யூனியன் (ரஷ்யா) 1929ஆம் ஆண்டு ஒரு காலண்டரை அறிமுகம் செய்தது. அதிலும் பெப்ரவரியில் 30 நாட்கள் இடம்பெற்றிருந்தது.
இவ்வாறாக 365 நாட்கள் 6 மணித்தியாலத்தை உலகத்தில் பல காலண்டர்கள் மாற்றியமைத்தாலும் கடைசியில் பெப்ரவரியில் 29 நாட்கள் என்ற லீப் வருடம் கடைபிடிக்கப்பட்டு கிரகோரியன் காலண்டரே உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது.