பாரிஸை முற்றுகையிட தயாராகும் விவசாயிகள்

பிரான்ஸின் தலைநகர் காலவரையறை இன்றி முற்றுகையிடப்படவுள்ளதாக நாட்டின் இரண்டு பிரதான விவசாய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதன்படி, தலைநகருக்குச் செல்லும் அனைத்து வீதிகளும் விவசாயிகளால் ஆக்கிரமிக்கப்படும் என குறித்த விவசாய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், தலைநகருக்கு தெற்கே உள்ள மிகப்பெரிய மொத்த உணவு சந்தையை முற்றுகையிடுவதற்கும் அவர்கள் உத்தேசித்துள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நாட்டின் தெற்கு வீதிகளை விவசாயிகள் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து பிரான்ஸ் அரசாங்கம் சில சலுகைகளை அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களின் பின்னர் பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் (Gabriel Attal) கால்நடைப் பண்ணையாளர்களை சந்தித்துள்ளார்.

இந்த நிலையில், விவசாய இயந்திரங்களுக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலை அதிகரிப்புக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்கும் என பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சில வீதிகள் திறக்கப்பட்டு போக்குவரத்து நடவடிக்கை வழமைபோன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், குறித்த இரு தொழிற்சங்கங்களின் அறிவிப்பானது பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டலிக்கு மீண்டும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin