அமெரிக்காவின் எட்லஸ் ஏர் போயிங் சரக்கு விமானம் வானில் பறந்துக்கொண்டிருந்த போது தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனையடுத்து அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
எட்லஸ் ஏர் போயிங் 747-8 சரக்கு விமானம் ஃபுக்டோரிகாவுக்கு புறப்பட்டுச் சென்றது. எனினும் வானில் பறக்க ஆரம்பித்து சிறிது நேரத்தில் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்தது.
இதனால், விமானம் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, விமானம் மியாமி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக எட்லஸ் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை நடந்த இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இருப்பினும், இந்த சம்பவத்தில் விமான ஊழியர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என மியாமி விமான நிலைய தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
வானில் விமானம் தீப்பிடித்து எரியும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.