எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை இன்னும் தீர்மானிக்கவில்லை என்று கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வேட்பாளர் குறித்தோ அல்லது வேட்பாளரை முன்வைப்பது குறித்தோ இன்னும் தீர்மானிக்கவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆவார்.
இந் நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக மேலும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் போது கட்சியின் அடிமட்ட மக்களின் விருப்பங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.
எவ்வாறெனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத்திட்டம் தொடர்பில் தற்போது கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.