வாகன இறக்குமதி தொடர்பில் வர்த்தமானி வெளியானது

அரசாங்கத்துக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள சில வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், இதன் மூலம் சாதாரண வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களின் அத்தியாவசியப் பணிகளுக்காக சில வாகனங்களை மாத்திரம் கொண்டு வருவதற்காகவே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கல்வி அமைச்சுக்கு 2 பஸ்கள், சுகாதார அமைச்சுக்கு 21 வண்டிகள், நடமாடும் மகப்பேறு கிளினிக்கிற்கு 3 வாகனங்கள், தொழிலாளர் அமைச்சுக்கு 1 வாகனம், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸுக்கு 3 பயணிகள் பஸ் என்பன மாத்திரமே இதன் மூலம் இறக்குமதி செய்யப்பவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு உதவியின் அடிப்படையிலேயே வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: admin