பிரேசிலில் 10 அடி உயரமுள்ள இரண்டு வேற்றுகிரகவாசிகளை கண்டதாகக் கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. பயணி ஒருவரால் பிடிக்கப்பட்ட காணொளியில் மலைப்பாங்கான இடத்தில் இரண்டு உருவங்கள் வழக்கத்திற்கு மாறான வேகத்தில் செல்வதை காட்டுகின்றது.
மலையேறுபவரான சாரா டேலேட் தனது குடும்பத்துடன் பிரேசில் தீவில் மலையடிவாரத்தில் சுற்றித் திரிந்தபோது, அவர்கள் மலையின் மேல் இரண்டு பெரிய உயிரினங்களைக் கண்டதாக கூறியுள்ளனர். இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
புளோரிடா மாலில் இருந்து இதேபோன்ற வேற்றுகிரகவாசிகள் இருப்பதாக அண்மையில் வந்த தகவலுக்கு பின்னர் தற்போது இந்த காணொளி வெளியாகியுள்ளது. எவ்வாறாயினும், புளோரிடா மால் காணொளியை உள்ளூர் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.
எனினும், தற்போது வெளியாகியுள்ள காணொளி குறித்து அதிகாரிகள் பதிலளிக்கவில்லை. மாறாக, அரசாங்கத்தில் உள்ள சில அதிகாரிகளே வைரலான காணொளியை பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் தி இன்டிபென்டன்ட் பத்திரிகையிடம் பேசிய பரானா மாநில அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர், “எங்கள் கோடை காலம் வேற்று கிரகவாசிகளை அழைத்துவந்துள்ளது.விசித்திரமான உயிரினங்கள் கூட எங்கள் கடற்கரையை அனுபவிக்க இங்கு வருகின்றன.” என்று குறிப்பிட்டிருந்தார்.