இலங்கை எதிர்காலத்தில் கணிசமான சனத்தொகை வீழ்ச்சியை எதிர்கொள்ளும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பேராசிரியர் டபிள்யூ.இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்துவதாகவும், இலங்கையில் பிறப்புகளின் எண்ணிக்கை 25 வீதத்தினால் குறைவடைந்தமை மிக முக்கிய காரணிகளில் ஒன்றாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற குழந்தை பிறப்புகளின் எண்ணிக்கை சுமார் 90,000 வரை குறைவடைந்துள்ளது என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் பதிவு செய்யப்படும் பிறப்புகள் எண்ணிக்கை இறப்புகள் எண்ணிக்கையை அண்மித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதன் காரணமாக இந்த நிலைமை மேலும் மோசமடையும் சாத்தியம் காணப்படுவதாக பேராசிரியர் டபிள்யூ.இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.