இலங்கைக்கு மீண்டும் கார்களை இறக்குமதி செய்வதற்கு தயாராகி வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 1000CC இற்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட கார்கள் மாத்திரம் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டொலர் இருப்பை பேணுவதற்கு குறைந்தபட்ச இயந்திர திறன் கொண்ட கார்களை மட்டுமே இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, மீண்டும் கார்களை இறக்குமதி செய்வதானது வருமான வரியை அதிகரிக்கும் நோக்கங்களில் ஒன்றாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கார்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான பணிகள் குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.