379 பேருடன் சென்ற விமானத்தில் தீப்பற்றியது: மீட்பு பணிகள் தீவிரம்

ஜப்பான் ஏர்லைன்ஸின் விமானம் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோர காவல்படை விமானத்துடன் மோதியதில் தீப்பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீட்புக் குழுவினர் தீயைக் கட்டுப்படுத்த முயன்றபோது, தீ விமானம் முழுவதும் பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து விமானத்தில் இருந்த 379 பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் கடலோர காவல்படை, அதன் விமானம் ஒன்று பயணிகள் விமானம் மீது மோதியதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கடலோர காவல்படை விமானத்தின் ஆறு பணியாளர்களில் ஐந்து பேர் கணக்கில் வரவில்லை எனவும் ஒருவர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஹனேடா விமான நிலையத்தின் அனைத்து ஓடுபாதைகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் 379 பயணிகளுடன் சென்ற விமானம் தீப்பற்றியது

ஜப்பானின் டோக்கியோ ஹனேடா விமான நிலையத்தில் ஓடுபாதையில் சென்ற விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானத்தின் ஜன்னல்களில் இருந்து தீப்பிழம்புகள் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஜேஏஎல் 516 என்ற விமானம் ஹொக்கைடோவில் இருந்து புறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீயை கட்டுப்படுத்த பணியாளர்கள் கடுமையாக போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் 300 பேர் இருந்ததாக ஜப்பான் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin