தேர்தலை நடத்த மாட்டோம்: நலின் பெர்னாண்டோ

2024ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு என்று சிலர் கூறினாலும், அரசாங்கம் 100 வீதம் வெற்றிகரமான பாதையில் பயணிக்கும் போதுதான் ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜாஎலவில் உள்ள அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர், பாதகமான சூழ்நிலையில் அரசாங்கம் தேர்தலொன்றுக்குச் செல்லாது. ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தலை நடத்த நாட்டுக்கு உரிய பொருளாதார அடித்தளத்தளம் இடப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறான பின்புலத்தில்தான் நாம் தேர்தலை நடத்துவோம்.

முட்டாள்தனமாக எமக்கு பாதகமான சூழ்நிலை இருக்கும்போது தேர்தலுக்கு செல்ல மாட்டோம். மக்கள் எதிர்பார்க்கும் வேலைத்திட்டத்துடன் எதிர்காலத்தில் மக்களிடம் செல்வோம். ஆகவே, இது தேர்தல் ஆண்டு எனக் கூறுபவர்களுக்கு வழங்க கூடிய செய்தி இதுதான்.‘‘ என்றார்.

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், தேர்தலை பிற்போடும் நோக்கில் அரசாங்கம் சில முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

என்றாலும், அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளது. தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது

Recommended For You

About the Author: admin