பெறுமதி சேர் வரி அமுல்படுத்தப்பட்டதன் மூலம் அனைத்து வகையான கையடக்கத் தொலைபேசிகளின் விற்பனை விலைகளும் இன்று முதல் அதிகரிக்கப்படுகின்றன.
இதன்படி, கையடக்கத் தொலைபேசிகளின் விற்பனை விலை 35 வீதத்தினால் அதிகரிக்கப்படுவதாக சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரி (VAT) 18 வீதத்தினால் அதிகரிக்கப்படுகின்றமையால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சம்பத் செனரத் தெரிவித்துள்ளார்.
குறித்த விலை அதிகரிப்பின் மூலம் கையடக்கத் தொலைபேசி கொள்வனவு சந்தையில் 50 வீதம் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, இன்று முதல் 50,000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி 67,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.