கனேடிய அரசின் உயரிய விருதான “ஓடர் ஓப் கனடா” (Order of Canada) தமிழரான அருண் ரவீந்திரன் உள்ளிட்ட 78 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனநல ஆராய்ச்சி குறித்த அவரது பங்களிப்புகளுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ஆளுநர் நாயகம் ஜெனரல் மேரி சைமன், அருண் ரவீந்திரன் உட்பட 78 பேருக்கான விருதுகளை இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
விருது அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் கனடாவை வாழ சிறந்த இடமாக மாற்றுவதில் பெரும் அர்ப்பணிப்பைக் காட்டியுள்ளனர் என்று ஆளுநர் நாயகம் ஜெனரல் மேரி சைமன் தெரிவித்துள்ளார்.
“நாடு முழுவதும் உள்ள கனடியர்களுக்கு அவர்களின் விடாமுயற்சி, புத்தி கூர்மை மற்றும் சமூக உணர்வுடன் பயனடைந்த தனிநபர்களைக் கொண்டாடும் வாய்ப்பை நான் பெரிதும் மதிக்கிறேன்,” என்று அவர் கூறினார்.