பேருந்துகளில் ஒலி எழுப்பும் கேசட் தொடர்பில் விசேட கவனம்

பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் கேசட் பிளேயர்களின் குறிப்பிடத்தக்க ஆபத்து குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அதன் செயற்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பேருந்துகளின் உள்ளே அதிக ஒலி காரணமாக பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் மற்றும் இடையூறுகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதிக சத்தத்துடன் இயங்கும் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நடவடிக்கையினை போக்குவரத்து பொலிஸார் கையாள்வதற்கான சாத்தியம் இருப்பதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்த்துள்ளார்.

இதனிடையே, எதிர்காலத்தில் பேருந்துகளினால் ஏற்படும் ஒலி மாசுபாட்டைக் குறைப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் சுற்றாடல் அமைச்சும் இணைந்து ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டமொன்றை தயாரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin