பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களில் பலர் வருட இறுதியில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக பல அரச நிறுவனங்களில் நடத்தப்படும் வைபவங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வைபவங்கள் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் நடத்தப்பட உள்ளன.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இவர்கள், அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி,அவுஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளதுடன் அந்நாடுகளில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடவுள்ளதாக கூறப்படுகிறது.