நகர்ப்புற வீடுகளின் உரிமையை அதன் குடியிருப்பாளர்களுக்கு வழங்குவதற்கான முதல் கட்டம் பெப்ரவரி மாதம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் கீழ் கொழும்பு உட்பட ஒவ்வொரு மாவட்டத்திலும் நகர அபிவிருத்தி அதிகாரசபை, வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நகர குடியேற்ற அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படும் வீடுகளின் உரிமை குடியிருப்பாளர்களுக்கே வழங்கப்படவுள்ளது.
அத்தகைய சுமார் 52000 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 50% வீடுகள் முதற்கட்டமாக வழங்கப்படும்.
வரவு செலவு திட்ட முன்மொழிவாக இந்த வேலைத்திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் செயலாளர் மேலும் தெரிவித்தார்