நாட்டில் மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 747,093 மாணவர்களுக்கு 3,000 ரூபா பெறுமதியான காலணி வவுச்சர்களை வழங்க கல்வி அமைச்சு 2,200 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.
கல்வி அமைச்சின் பதிவு செய்யப்பட்ட கடைகளில் காலணிகளை பெற்றுக் கொள்வதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவிக்குமாறு மாகாண, பிராந்திய மற்றும் பிரதேச கல்வி அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான சுற்றறிக்கை கல்வி அமைச்சினால் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் அதற்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் பிரிவெனா மாணவர்களுக்கு சீருடை, பாடப்புத்தகங்கள் மற்றும் காலணிகள் வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நேற்று (04) இடம்பெற்ற வைபவத்தில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.