சுவிட்சர்லாந்து அறிமுகம் செய்யும் விரைவு புகலிடக்கோரிக்கை

சுவிட்சர்லாந்து விரைவு புகலிடக்கோரிக்கை திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக புலம்பெயர்தலை ஆதரிக்காத சுவிட்சர்லாந்து, எக்ஸ்பிரஸ் புகலிடக்கோரிக்கை திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளதால், அதன் நோக்கம் என்னவாக இருக்கும்?

சுவிட்சர்லாந்து, எக்ஸ்பிரஸ் புகலிடக்கோரிக்கை திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. ஆனால், அதன் நோக்கம் புகலிடக்கோரிக்கையாளர்களை இரு கரம் நீட்டி வரவேற்று குடியமரச் செய்வதல்ல.

சூரிச்சில் ஏராளமான புகலிடக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதற்காக காத்திருப்பதைத் தொடர்ந்து சுவிஸ் அரசு இந்த எக்ஸ்பிரஸ் திட்டத்தை அறிமுகம் செய்கிறது.

இந்த திட்டத்தை நீதித்துறை அமைச்சரான Elisabeth Baume-Schneider முன்வைத்துள்ளார்.

சுவிட்சர்லாந்து அறிமுகம் செய்யும் விரைவு புகலிடக்கோரிக்கை திட்டம்: ஆனால் அதன் நோக்கம்… | New Express Asylum Plan

உண்மையில், இந்த திட்டம் யார் உண்மையான புகலிடக்கோரிக்கைக்கு விண்ணப்பிக்கவில்லை, அதாவது யாருடைய கோரிக்கை உண்மையானது அல்ல, உண்மையாகவே இந்த நாட்டிலேயே வாழும் திட்டமில்லாமல் புகலிடம் கோருபவர்கள் யார் என்பதைக் கண்டறியும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இத்திட்டம், எதிர்மறையான நோக்கத்துடனேயே கொண்டுவரப்பட்டுள்ளதாக கருத்து உருவாகியுள்ள நிலையில், அப்படியே புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியுமே என்கிறார் சூரிச் கவுன்சிலர்.

Recommended For You

About the Author: admin