உலக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டிக்குள் நுழைந்த அவுஸ்ரேலியா

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண அரையிறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணியை 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப்பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா அணி தகுதி பெற்றுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 49.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 212 ஓட்டங்களை பெற்றது.

தெனனாப்பிரிக்க அணி சார்பில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 101 ஓட்டங்களைப் பெற்றார்.

அவுஸ்திரேலிய அணி சார்பில் பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து, 213 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 47.2 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 62 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் தப்ரைஸ் ஷம்சி மற்றும் ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

அதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19-11-2023) இடம்பெறவுள்ள 2023 உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.

Recommended For You

About the Author: webeditor