இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அமெரிக்கா

இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமெரிக்கா புதிய திட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையத்தை நிர்மாணிப்பதற்கான 553 மில்லியன் டொலர் திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது.

இலங்கையில் அமெரிக்கா முன்னெடுக்கடும் மிகப்பெரிய முதலீடு ஆகும் இது. கடுமையான நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கை போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இலங்கைக்கு இது மகிழ்ச்சியையும், சீனாவிற்கு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

கொழும்பு துறைமுகம் 2021 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

மேலும், இந்தப் புதிய முனையம் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு பெரிய பொருளாதார வளர்ச்சியை கொடுக்கும். பசிபிக் கடலில், சீன கடலில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா தற்போது இந்திய பெருங்கடலில் காலடி எடுத்து வைத்துள்ளது.

சீனாவின் ஆதிக்கத்திற்கு இது முற்றுப்புள்ளியாக அமையும் என்கிறார்கள்.

இன்னொரு பக்கம் இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்திற்கு அமெரிக்கா முற்றுப்புள்ளி வைப்பது இந்தியாவிற்கு மகிழ்ச்சியான செய்தி ஆகும்.

பாதுகாப்பு ரீதியாகவும், கடல் ரீதியாகவும், ஆசிய வளர்ச்சி ரீதியாகவும் இந்தியாவிற்கு இந்த முடிவு சாதகமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor