கொழும்பு மற்றும் களுத்துறையை உள்ளடக்கிய மேல் மாகாண தெற்கில் உள்ள 13 அஞ்சல் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பான அபராதங்களை ஏற்றுக்கொள்வதற்காக இந்த அஞ்சல் நிலையங்கள் இரவிலும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
7 நாட்களும் 24 மணித்தியாலங்களும்
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட இதனை அறிவித்துள்ளார்.
இதன்படி கொம்பனி வீதி, ஹெவ்லொக் டவுன், வெள்ளவத்தை, பொரளை, கொட்டாஞ்சேனை, பத்தரமுல்ல, நுகேகொட, தெஹிவளை, கல்கிசை, மொரட்டுவ, பாணந்துறை, களுத்துறை மற்றும் சீதாவகபுர போன்ற குறிப்பிட்ட அஞ்சல் நிலையங்கள், 7 நாட்களும் 24 மணித்தியாலங்களும் திறந்திருக்கும்.
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக வாகன செலுத்துனர்களை சோதனையிடும் போதும்,இந்த அஞ்சல் நிலைய சேவைகள் தொடர்பில் போக்குவரத்து பொலிஸார் அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.