நாட்டின் செவ்விளநீருக்கு சர்வதேச சந்தையில் அதிகமான கேள்வி நிலவுவதாக இலங்கை தெங்கு அபிவிருத்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் செவ்விளநீர் ஏற்றுமதியின் மூலம் 140 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
அதிகரித்துள்ள ஏற்றுமதி
சுமார் 14 மில்லியன் செவ்விளநீர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதன் ஊடாக இந்த இலாபம் ஈட்டப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் செவ்விளநீர் ஏற்றுமதி 117 வீதத்தால் அதிகரித்துள்ளது இலங்கை தெங்கு அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
கடந்த வருடம் 11 மில்லியன் செவ்விளநீர் தொகை ஏற்றுமதி செய்யப்பட்டதுடன், அதில் 110 மில்லியன் ரூபா இலாபமும் கிடைக்கப்பெற்றுள்ளது.