வடக்குப் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களின் இடைவிலகல் வீதம் அதிகரித்து உள்ளதாகவும், தாங்களாகவே வாசிக்கும் எழுதும் திறன் ஆரம்ப கல்வி மாணவர்கள் இடையில் குறைவடைந்து வருவதாகவும் வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் கல்விக்காக பெருமளவான நிதியை செலவழித்து வரும் நிலையில் வடக்குப் பிரதேசத்தில் மாணவர்களை இடைவிலகல் தொடர்பில் அவர் கவலை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பில் ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலை மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதன் மூலம் நாடு முன்னேற்றபாதையை நோக்கி செல்ல முடியும். வடமாகாணத்தை பொறுத்தவரையில் கல்வியில் பின்னோக்கி செல்வது வேதனையான விடயமாகும்.
வடக்கில் தற்போது பாடசாலையில் இருந்து இடை விலகும் மாணவர்களின் விகிதம் அதிகரித்து செல்கிறது.
அதேவேளை, சுயமாக வாசிக்கும், எழுதும் திறன் ஆரம்ப பிரிவு மாணவர்கள் மத்தியில் குறைவடைந்து செல்கிறது.
இதுவொரு ஆபத்தான விடயமாகும். எனவே ஆரம்ப பிரிவு மாணவர்களின் சுயமாக வாசிக்கும் எழுதும் திறனை வளர்ப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.