மகிந்த கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக அண்மைக்கால செயற்பாடுகள் புலப்படுத்துகின்றன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அதிரடி நடவடிக்கையால் கடும் அதிருப்தி கொண்டுள்ள பொதுஜன பெரமுன கட்சியினரே இவ்வாறு பிளவுபட்டுள்ளனர்.

மகிந்த தரப்பினரால் கோரப்பட்ட அமைச்சு பதவிகளை வழங்க ரணில் திட்டவட்டமாக மறுத்துள்ளார். நீண்டகாலமாக அமைச்சு பதவிக்காக தவமிருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம் கிடைத்துள்ளது.

கட்சிக்குள் பிளவு
இந்நிலையில் அமைச்சுப் பதவிகளை கோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் பத்தரமுல்லை நெலும்வத்தையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருவதை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்மொழியப்பட்ட ரோஹித அபேகுணவர்தன, எஸ். எம். சந்திரசேன, விமலவீர திஸாநாயக்க, ஜனக பண்டார தென்னகோன், சி. பி. ரத்நாயக்க உட்பட பலர் கட்சி அலுவலகத்தை புறக்கணித்து வருவதாக தெரிய வருகிறது.

இதேவேளை, கெஹலிய ரம்புக்வெல்லவின் அமைச்சு மாற்றம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் பாரிய முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆண்டு
இவ்வாறான நிலையினைக் கருத்திற் கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குழுக்களாகப் பிளவு ஏற்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2024ஆம் ஆண்டை தேர்தல் ஆண்டாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளமையானது அந்தக் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor