கொழும்பில் வீடற்றவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

கொழும்பில் மத்தியதர வர்க்கத்தினருக்கு 05 வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் சீன அரசாங்கத்திடம் இதற்கான ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டுத்திட்டம்
2024ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டத்துடன் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

நமது நாடு அனைத்து நிலப்பரப்பு, காலநிலை மண்டலங்கள் மற்றும் ஏராளமான இயற்கை வளங்களைக் கொண்ட ஒரு அழகான தீவு. உலகிலேயே மிகக் குறைவான இயற்கை அபாயங்களைக் கொண்ட நாடாகவும், பெறுமதிமிக்க கனிம வளங்களைக் கொண்ட நாடாகவும் பல நல்ல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

அவற்றை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

350 மில்லியன் டொலர்
இந்தத் திட்டங்களுக்காக 350 மில்லியன் டொலர்கள் செலவிடப்படவுள்ளதுடன், அதனை மானியமாக வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது 2500 வீடுகளைக் கொண்ட பெரிய திட்டமாகும் என ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor