இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு!

காலாவதியான விசாவுடன் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு விசா வழங்க இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தீர்மானித்துள்ளது.

அதன்படி இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் இஸ்ரேலில் தங்கி இருப்பவர்களின் தகவல்களை சேகரிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (24.10.2023) இடம்பெற்றதுடன் இன்றும் (25.10.2023) இடம்பெறவுள்ளதாக நிமல் பண்டாரத் தெரிவித்துள்ளார்.

அதன்படி நேற்று (24.10.2023) ஏராளமானோர் தூதரகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

விசா இல்லாத இலங்கையர்களுக்கும் விசா வழங்க கோரிக்கை
இஸ்ரேல் குடிவரவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எயால் சிஸ்ஸோ உள்ளிட்ட மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கைத் தூதரகத்திற்கு விஜயம் செய்து, வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் விசா இல்லாத ஏனைய இலங்கையர்களுக்கும் விசா வழங்குமாறு குடிவரவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்ததாக தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.

விசா காலாவதியான பின்னரும் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களின் விசாக்களை புதுப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அந்த கோரிக்கையை இஸ்ரேல் குடிவரவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எயால் சிஸ்ஸோ ஏற்றுக் கொண்டுள்ளதோடு, செல்லுபடியாகும் விசா இன்றி இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களின் தகவல்களை கோரியுள்ளதாகவும் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

விசா நீடிக்கப்பட்டதன் பின்னர் அந்த இலங்கையர்களுக்கு விவசாயத் துறையில் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும் பணிப்பாளர் நாயகம் இணங்கியதாக தூதுவர் மேலும் தெரிவித்தார்

Recommended For You

About the Author: webeditor