முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நான்கு இலட்சம் (4,00,000)ரூபாய்க்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!
மானிப்பாய் மற்றும் மல்லாகத்தை பூர்வீகமாகவும் கனடா,பிரம்டன் நகரில் வசிப்பவர்களும் பூமணி அம்மா அறக்கட்டளை மற்றும் சர்வதேச தமிழ் வானொலி(ITR)பிரான்ஸ்-இலங்கை ஆகியவற்றின் தீவிர ஆதரவாளர்களும் அபிமானிகளுமான திரு செல்லையா கதிர்காமநாதன்,திருமதி சறோஜினிதேவி கதிர்காமநாதன் மற்றும் அவர்களின் புதல்வியான சிவப்பிரியா ஆகியோரின் நிதிப் பங்களிப்பில், அறக்கட்டளையின் தீவிர செயற்பாட்டாளரும் மானிப்பாய் மற்றும் கனடா ரொறண்டோவை,வதிவிடமாகக் கொண்டவருமான திரு இராதாகிருஷ்ணன் அவர்களின் ஏற்பாட்டின் ஊடாக அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் வானொலி சேவையின் பணிப்பாளருமான திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில்,24.10.2023அன்று,குறித்த நிகழ்வின் நிதிக் கொடையாளர்களுடன் இணைந்து,பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கை நாட்டிற்கான செயலாளரும் கௌரவ கலாநிதியும் சமாதான நீதவானும் முன்னாள்,வலிகாமம் தெற்கு பிரதேசசபை சுன்னாகம்,யாழ் மாநகரசபை,வட மாகாணசபை உறுப்பினருமான N.விந்தன் கனகரட்ணம், அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம்,நிர்வாகசபை உறுப்பினர் ய.தேவதாஸ் ஆகியோரால் முல்லைத்தீவு,புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பத்தொன்பது கிராம சேவையாளர் பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட, போரினால் அங்கவீனப்பட்ட,வறிய நிலை,மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் என நூறு குடும்பங்களுக்கு, குடும்பம் ஒன்றிற்கு, நான்காயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள்படி, நான்கு லட்சம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள்,மூங்கிலாறு,தேராவில் பகுதியில் வைத்து,பயனாளிகளுக்கு உலர் உணவு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வுக்கு தாமரை மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர் திரு சி.சிவகிருஷ்ணன்(ரூபன்)தலைமை வகித்து,அனுசரணை வழங்கி இருந்தார்.மேலும் நிகழ்வில் முல்லைத்தீவு விவசாய கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர் எஸ்.சசிகரன்,புதுக்குடியிருப்பு பிரதேச செயலக சமூக,சேவைகள்,திணைக்கள,அபிவிருத்தி,உத்தியோகத்தர்களான கே.விஜிதா,எஸ்.அருள்வதனி,சமூக,சேவையாளரான அ.சிவா ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.