0-30 அலகுகளிலிருந்து நிலையான கட்டணம் 150 ரூபா முதல் 180 ரூபாவாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஒரு மின் அலகு விலை 12 ரூபாவாகும்.
31 முதல் 60 அலகுகள் வரை நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 300 ரூபாவிலிருந்து 360 ரூபாவாக அதிகரிக்கிறது. அந்த வகையில் ஒரு மின் அலகு விலை 30 ரூபாவாகும்.
61 முதல் 90 அலகுகளுக்கு இடையே 400 ரூபா முதல் 480 ரூபாவாகவும், 91 முதல் 120 வரை 1,000 ரூபா முதல் 1,180 ரூபாவாகவும், 121 முதல் 180 வரை 1,500 ரூபா முதல் 1,770 ரூபாவாகவும், 180 அலகுகளுக்கு மேல் இருந்தால் 2,000 ரூபா முதல் 2,360 ரூபாவாகவும் நிலையான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இன்று முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை மின் கட்டண அதிகரிப்பு அமுலில் இருக்கும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.#


