இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலான (INS) ‘ஐராவத்’ முறையான பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை அமைவாக வரவேற்றனர்.
கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ள INS ‘ஐராவத்’ 124.8 மீ நீளமுள்ள, தரையிறங்கும் கப்பல் (LST – L) 170 பேர் கொண்ட பணியாளர்களைக் கொண்டதாகவும், கமாண்டர் ரிந்து பாபு தலைமையில் இந்தக் கப்பல் இருப்பதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
கப்பலின் கட்டளை அதிகாரி மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் மேற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேராவைச் சந்தித்துள்ளார்.
கப்பல் தங்கியிருக்கும் காலத்தில், பணியாளர்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து பல பயிற்சி நிகழ்ச்சிகளை நடாத்துவதுடன், நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தலங்களையும் பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.