பசறை பகுதியில் 100 கஞ்சா செடிகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெமேரியா A பிரிவு, மாத்தன்னை டிவிஷன் பகுதியில் உள்ள வீட்டு தோட்டம் ஒன்றில் கஞ்சா பயிரிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசறை ஆக்கரத்தன்ன பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடிப் படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா செடி
இதனையடுத்து அப் பகுதியை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது பயிரிடப்பட்டிருந்த 1 அடி உயரமுள்ள 100 கஞ்சா செடிகளும் 9 கிராம் காய்ந்த கஞ்சாவும் விஷேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைபில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அச் சந்தேக நபரையும் கஞ்சா செடிகளும் பசறை பொலிஸ் நிலையத்தில் விஷேட அதிரடிப் படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் அச் சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இன்றைய தினம் பசறை நீதிமன்றத்தில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.