யாழ்ப்பாணம் – கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு விழாவின் நிறைவுநாள் நிகழ்வு இன்று ஆசிரியர் கலாசாலை முன்றலில் இருந்து ஆரம்பமாகியது.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டுக் குழுவின் ஏற்பாட்டில் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்பள்ளிச் சிறார்களின் நான்கு மதங்களைப் பிரதிபலிக்கக் கூடிய வகையில் கலைநிகழ்வுகளுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சர் சட்டத்தரணி சுசில் பிரேமஜெயந்த கலந்துகொண்டார்.
பிரதான மண்டபத்தில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்களின் கலை,கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன.
பின்னர் நூற்றாண்டு மலர் வெளியீடும் முத்திரையும் வைக்கப்பட்டன.
இதில் கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா, கல்வி அமைச்சின் செயலாளர் ரணசிங்க, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன்,வடமாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ்,மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர்கள்,கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் பழைய அதிபர்கள்,ஆசிரியர்கள்,கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் கல்வி கற்கும் ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.