நாட்டில் இணையத்தள முறைகள் மற்றும் சமூக ஊடக வலையமைப்புகள் மூலம் அதிக வட்டிக்கு எவ்வித சட்ட கட்டமைப்பும் இன்றி பணம் வழங்கும் நிறுவனங்களினால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இணையத்தள முறைகள் மூலம் பண மோசடிகளினால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கம் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது.
இலன்கையின் தற்போதைய நிலையில், இணையத்தள முறைகள் மூலம் உடனடியாக கடன் வழங்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து தற்போது பேசப்படுகிறது.
குறித்த நிறுவனங்களில் கடன் பெற்ற சிலர் தாம் எதிர்கொண்ட அசௌகரியங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே, சமூக ஊடக வலையமைப்புகள் மற்றும் இணையத்தள முறைகள் மூலம் கடன் பெற்று இன்னல்களுக்கு உள்ளானவர்கள் ஒன்றிணைந்து இணைய பண மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களின் சங்கம் என்பதனை உருவாக்கியுள்ளனர்.