இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்திற்கு தேர்தல் இன்று

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்த இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கான உத்தியோகபூர்வ தேர்தல் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.
குறித்த தேர்தல் டொரிங்டன் பிளேஸில் உள்ள விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாவும், இதில் 67 கழகங்களின் பிரதிநிதிகள் இதில் பங்குபற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்காணிப்பதற்காக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 4 பிரதிநிதிகள் நேற்று இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அத்துடன், சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்பு நாடுகளின் உள் விவகாரங்களுக்கு பொறுப்பான துறையின் பணிப்பாளரும் இலங்கைக்கு வந்தடைந்துள்ளார்.
அனுராதபுர கழகத்தின் தலைவர் தக்ஷித சுமதிபாலவும், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் நேற்றிரவு இறுதி அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor