சீரற்ற காலநிலை தொடர்பில் வாகன சாரதிகளுக்கான எச்சரிக்கை!

நாட்டில் பல்வேறு பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மலையகப்பகுதிகளுக்கு செல்லும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதி, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி மற்றும் பதுளை – கொழும்பு பிரதான வீதிகளில் அதிக பனிமூட்டம் நிலவுவதாகவும் இதனால் இந்த வீதிகளில் செல்லும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் குறிப்பிட்டுள்ளனர்.

மகிழுந்து விபத்து
குறித்த வீதிகளில் மண்சரிவு நிலவும் அபாயம் காணப்படுவதன் காரணமாக சாரதிகள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

இதேவேளை ஹட்டன் – கொட்டகலை வீதியில் அதிக வேகத்துடன் பயணித்த மகிழுந்து ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளான சம்பவம் ஒன்றும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

டிக்கோயா பகுதியிலிருந்து சென்ற மகிழுந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகவும் மகிழுந்தில் சாரதி மாத்திரமே பயணித்துள்ளார் என்பதோடு அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்டனர்.

Recommended For You

About the Author: webeditor