நாளை சனிக்கிழமை (2) முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் 4% அதிகரிக்கப்படும் என பேருந்து சங்கங்கள் அறிவித்துள்ளன.
இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் டீசலின் விலை 35 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது ஆண்டுதோறும் ஜூலை மாதம் பேருந்து கட்டண திருத்தம்மேற்கொள்ளப்படுகின்றது.
இருப்பினும் இந்த ஆண்டு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்பு
ஓகஸ்ட் (31) நள்ளிரவு முதல் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கபட்டநிலையில், பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
டீசல் விலை உயர்வின் தாக்கம் 4 சதவீதத்திற்கு மேல் இருந்தால், பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் , கட்டணம் அதிகரிக்கப்படுமா இல்லையா என்பது குறித்த அறிவிப்பு இன்று (01) பிற்பகல் வெளியிடப்படும் என்றும் அதே அதிகாரி மேலும் தெரிவித்தார்.