அம்பாறை வீரமுனையில் சுய தொழில் முயற்சிக்கான உதவித் திட்டம்!!!
கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும் சமூக சேவையாளருமான திரு கு.ஹென்றி மகேந்திரன் அவர்கள்,பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான கெளரவ கலாநிதி ந.விந்தன் கனகரட்ணம் அவர்களிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய,”நாட்டில் இடம்பெற்ற வன்செயல் காரணமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்த வீரமுனையைச் சேர்ந்த அம்பலவாணர் கனகசூரியன்(ஆட்டோமணி)அவர்களின் குடும்பம் கணவனை,தந்தையை இழந்து தினமும் வாழ்வாதாரத்துக்கே கஷ்டப்பட்டு வருவதாகவும் அக் குடும்பத்தினருக்கு சுய தொழில் முயற்சிக்காக தையல் இயந்திரம் ஒன்று வழங்கி உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
குறித்த கோரிக்கையினை பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான யாழ்,தீவகம் வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா அவர்கள் சாதகமாக பரிசீலித்து,பூமணி அம்மா அறக்கட்டளை,சர்வதேச தமிழ் வானொலி(ITR)பிரான்ஸ்-இலங்கை,ஆகியவற்றின் தீவிர ஆதரவாளர்ளும் தீவிர அபிமானிகளுமான கனடா மொன்றியலைச் சேர்ந்த திரு/திருமதி மோகனதாஸ் சாந்தகுமாரி தம்பதிகளின் முப்பத்திரெண்டாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு அவர்களின் நிதி உதவி மூலம்,அறுபத்து நான்காயிரத்து அறுநூறு(64600.00)ரூபா பெறுமதியான தையல் இயந்திரமும் மூவாயிரம்(3000.00) ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்களும் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் இன்றைய உதவி வழங்கும் நிகழ்வில் ந.விந்தன் கனகரட்ணம் அவர்களுடன் திரு கு.ஹென்றி மகேந்திரன்,கே.தியாகராசா,எஸ்.பிரபு,V.சுகுமார் மாஸ்டர்,பொ.தவராசா(கண்ணன்)ஆகியோரும் கலந்து சிறப்பித்து உதவித் திட்டத்தினை வழங்கி வைத்தனர்.