அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் குழு தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, கபீர் ஹாசிம், தலதா அத்துகோரள, எரான் விக்ரமரத்ன உள்ளிட்ட சபை உறுப்பினர்கள் குழு விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
நிபந்தனைகளின் பேரில் ஆதரவு
அனைத்துக் கட்சி அரசாங்கத்தை ஆதரிப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கலந்துரையாடலில் நிபந்தனைகளின் பேரில் சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இது குறித்து மேலும் விவாதிக்க உறுப்பினர்கள் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் சிறுபான்மை கட்சிகள் உட்பட பெரும்பாலான கட்சிகள் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.