திங்கள் முதல் நலன்புரிக் கொடுப்பனவு

பயனாளிகளுக்கான கொடுப்பனவை வழங்க ஆரம்பிக்கவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை (28.08.2023) இந்த நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ள பயனாளிகள் முதல்கட்டத்தில் கொடுப்பனவுகளை பெறுமதி வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட கொடுப்பனவு
இதேவேளை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவினை கடந்த வெள்ளிக்கிழமை (25.08.2023) முதல் பெற்றுக் கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க முன்னதாக அறிவித்திருந்தார்.

அத்துடன் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு இம்மாதத்துக்குள் கொடுப்பனவுகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் செஹான் சேமசிங்க கூறியிருந்தார்.

மேலும், அஸ்வெசும நலன்புரி செயற்திட்டத்தில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை இதுவரை காலமும் வழங்கப்பட்ட நலன்புரி கொடுப்பனவுகளை தொடர்ந்து வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியிருந்தமைக்கு அமைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் முன்னதாக சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor