சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்

சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (ஒகஸ்ட் 14) கொழும்பிலிருந்து புறப்பட்டார்.

சீன வர்த்தக அமைச்சகம் மற்றும் யுனான் மாகாண அரசு இணைந்து நடத்தும் 7வது சீனா-தெற்காசியா எக்ஸ்போ மற்றும் 27வது சீனா குன்மிங் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கண்காட்சி ஆகியவற்றில் அவர் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.

சீனாவின் குன்மிங்கில் ஆகஸ்ட் 16 முதல் 20 வரை எக்ஸ்போ நடைபெறவுள்ளது.

எக்ஸ்போ ஏற்பாட்டாளர்களின் கூற்றுப்படி, இந்த மாபெரும் வர்த்தக காட்சியில் 60 நாடுகள் பங்கேற்கும். அவை அனைத்து தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளும், RECP உறுப்பு நாடுகளும் அடங்கும்.

‘பொது வளர்ச்சிக்கான ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு’ என்ற கருப்பொருளின் கீழ் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.

பிரதமருடன் இராஜாங்க அமைச்சர்களான தாரக பாலசூரிய, ஜனக வக்கும்புர மற்றும் கனக ஹேரத், நாடாளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோரும் சென்றுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor